இந்தப் பதிவில் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் எப்படி 4g Network மட்டும் வருமாறு செய்வது என்று பார்ப்போம்.
அநேக ஆண்ட்ராய்ட் மொபைல்களில் நெட்வொர்க் ஆனது தன்னியக்கமாக தேர்வு செய்யும் வகையில் அமைந்திருக்கும் உதாரணமாக 3ஜி அல்லது 4ஜி என நீங்கள் தேர்வு செய்து இருப்பின் தன்னியக்கமாக இவை மாறி மாறி வந்து கொண்டிருக்கும் உங்களது இடத்தில் உள்ள நெட்வொர்க்கை பொறுத்து.
இதனால், பல சமயங்களில் உங்களது இணைய வேகத்தில் பாரிய இடர்பாடுகளை நீங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும்.
தனியே 4g மட்டும் தேர்வு செய்வதற்கான வசதி அனேக அன்ரொய்ட் மொபைல்களில் இல்லாதிருப்பது பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது இதனைச் சரி செய்வதற்கு என்று ஒரு சிறந்த அன்றோய்டு செயலி ஒன்று ப்ளே ஸ்டோரில் இருக்கின்றது அதனுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது அதை அழுத்தி உங்களது மொபைலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஓபன் செய்து கீழே படங்களில் காட்டியவாறு செட்டிங்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் உங்களது மொபைல் தனியே 4g இல் மட்டும் இயங்கும்.
சிலவேளைகளில் நீங்கள் நீண்ட நேரமாக இணையத்தை பயன்படுத்த இருக்கும்போது இந்த அமைப்பு ஒரு வேளை மாறலாம் அப்படி மாற்றமடையும் போது மீண்டும் அந்த செயலிக்கு சென்று செட்டிங்ஸ் செய்து விட்டால் மீண்டும் தொடர்ந்து 4g இல் இயங்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்களது நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களது ஃபேஸ்புக் பக்கத்தினை லைக் செய்து கொள்ளுங்கள். இன்னும் பல சுவாரசியமான பதிவுகளுடன் உங்களை சந்திக்கின்றேன் நன்றி.
0 Comments