Exchange

Arduino Programming In Tamil - Arduino uno pin diagram explanation - ஆர்டினோ உனோ முட்களின் வரைபட விளக்கம் - Arduino in Tamil

ஆர்டியுனோ ரியூட்டோரியல் சீரிஸ் இல் ஆர்டினோ உனோ (Arduino Uno) வின் முட்கள் பற்றிப் பார்க்கப் போகின்றோம். அதாவது pinouts of arduino uno. இது மிக முக்கியமான விளக்கம், ஏனென்றால் எந்தெந்த பின்(pin), எதற்குப் பயன்படுகின்றது என்று தெரிந்தால் தான் தொடர்ந்துவரபோகும் arduino projects களில் உங்கள் ஆர்டியுனோவை உங்களால் கையாளமுடியும்.


Arduino Uno ஆனது 6 அனலொக் (Analog A0-A5) பின் களையும் 14 டிஜிட்டல் (Digital 0-13) பின் களையும், பவர் ஜாக் (Power jack) மற்றும் யூ.எஸ்.பி ஜாக் (USB Jack), ICSP header எனப்படும் கீழ்ப் பகுதியில் கட்டமிட்டுக் காட்டியுள்ள 6 பின் களையும், வோல்டேஜ் (V5, V3.3), கிரவுண்ட், சில பிரத்தியேக பின் களையும் (AREF,SDA,SCL) கொண்டது. இவற்றை உங்கள் போர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள்.

Arduino Uno pinout - Power Supply
Power Supply என்றால் என்னவென்றால், ஆர்டியுனோவை இயக்குவதற்கான மின்சாரத்தை வழங்குவதைக் குறிக்கும். ஆர்டியுனோவிற்கு மூன்று வழிகளில் Power Supply செய்யலாம். எந்த வழி என்றாலும் நேரோட்டத்தையே (DC) பயன்படுத்த வேண்டும்.

Barrel Jack
இது ஆர்டியுனோ வின் மேல் புறம் இடது மூலையில் காணப்படும் கறுப்பு நிற ஜாக் ஆகும். மேலுள்ள படத்தில் power jack 5v என்று குறிப்பிட்டுள்ளேன். இதனூடாக 5-20 voltage வரை அழுத்த வேறுபாட்டைக் கொடுக்கலாம் என குறிப்பிட்டிருப்பினும், 5-7 voltage வரை கொடுப்பதே சிறந்தது, அதிகமாக கொடுத்தால் போர்ட் அதிகம் சூடாக ஆரம்பிக்கும்.

Vin pin
இது ஆர்டியுனோவின் இடதுபுறம், A0 என்ற அனலொக் பின் இற்கு மேல்ப் புறம் Vin எனக் குறிப்பிட்டுக் காணப்படும், அதில் 5-7 voltage இனைக் கொடுக்கலாம்.

USB cable
இது ஆர்டியுனோவின் மேற்புறம், சற்று வலதுபக்கமாக உள்ள USB Jack அகும், யூ.எஸ்.பி கேபிள் ஊடாக உங்கள் கணினியில் இணைத்தோ, அல்லது USB Charger மூலமாகவோ 5 voltge கொடுத்து இயக்கலாம்.

5v and 3.3v pins (+ve)
ஆர்டியுனோவின் இடதுபுறம் உள்ள பின் வரிசைகளில் பார்த்தால் 3.3v மற்றும் 5v என்ற இரண்டு பின் களை அருகருகே காணலாம், இவை ஆர்டியுனோ போர்ட்டில் இருந்து power supply ஐ பெறும் பின்களாகும். ஆர்டியுனோவுடன் இதர எலக்ரோனிக் சேர்க்கிட் களை இணைக்கும்போது அவற்றுக்கான மின்சாரத்தை பெற்றுக் கொள்ள இவைகள் பயன்படும்.

GND
மொத்தமாக 5 GND பின் கள் ஆர்டியுனோ உனோ போர்ட்டில் காணப்படும், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். இவை சுற்று முழுவதும் பொதுவான தர்க்க குறிப்பு அளவை வழங்கவும், மின்சாரத்தின் மறை (-ve) முனைவுகளாகவும் தொழிற்படும்.

RESET
ஆர்டியுனோவை ரீசெட் செய்ய பயன்படும்.

Arduino Uno Pinout - Analog IN
ஆர்டியுனோ உனோவில் 6 அனலொக் பின் கள் காணப்படுகின்றன, இவை A0-A5 வரை பெயரிடப்பட்டிருக்கும், ஆர்டியுனோ வின் இடதுபுறமுள்ள பின் வரிசையில் இருக்கும்.

இவை அனலொக் சிக்னல்களை உள்வங்கும், எனினும் இவை டிஜிட்டல் சிக்னல்களை உள் வாங்குபவையகவும், வெளியிடுபவையாகவும் தொழிற்பட வல்லவை.



Arduino Uno Pinout - Digital Pins
ஆர்டியுனோவின்  வலதுபுறம் காணப்படும் 0-13 வரையான பின் கள் டிஜிட்டல் பின் களாகும். இவை டிஜிட்டல் சிக்னல்களை உள்வாங்கவும், வெளியிடவும் கூடியனவாக உள்ளன.

13 ஆம் இலக்கப் பின் ஆனது போர்டிலுள்ள ஒரு சிறிய LED உடன் இணைக்கப்பட்டதாக வரும், இதனால் ஏதவது டியிட்டல் சிக்னல் 13 வது பின் ஊடாக வந்தால் இணைக்கப்பட்டுள்ள LED உம் சேர்ந்து ஒளிரும்.



Arduino Uno Pinout - ICSP Header

Post a Comment

0 Comments