Exchange

How To Create a Blog in Tamil - Important settings in blogger for get more visitors - அதிக விசிட்டர்களை பெற பிளாக்கரில் முக்கியமாக செய்யவேண்டிய செட்டிங்ஸ்

உங்கள் பிளாக்கரில் என்னதான் பல சுவாரசியமான, பயனுடைய விடையங்கள் இருந்தாலும் சில முக்கியமான செட்டிங்ஸ் (blog setting) களை செய்திருக்காவிட்டால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த பார்வையாளர்கள் உங்களுக்கு கிடைக்கமாட்டார்கள்.
சரியாக செட்டிங்ஸ் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே கூகில், ஏனைய தேடுபொறிகளில் (search engines) உங்கள் பிளாக் இடம்பெறும், மக்கள் தேடும்போது உங்கள் போஸ்ட் (blog post) களும் அவர்களுக்கு காண்பிக்கப்படும். அந்த blog settings என்னென்னெ, அவற்றை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் உங்கள் Blogger account இல் நுளைந்து, எந்த blog இற்கு blog setting செய்யப்போகின்றீர்களோ, அதனை தெரிவு செய்யுங்கள். பின்னர் setting பகுதிக்குள் செல்லுங்கள்

setting பகுதியில் Basic என்பது தன்னியக்கமாகவே தேர்வாகிக் காணப்படும், இதில் முக்கியமான இரண்டு blogger settings செய்யவேண்டும். கீழுள்ள படத்தைப் பாருங்கள்.


Basic


Privacy setting of the blog

privacy என்ற option ஐ அழுத்தினால் கீழுள்ளவாறு தோன்றும், அதில் காட்டியுள்ளவாறே இரண்டு options இலும் yes என தேர்வு செய்து save செய்துகொள்ளுங்கள்.
இதனால் google listing இல் உங்கள் blogger site சேர்க்கப் படுவதுடன், தேடுபொறியால் உங்கள் blogger இனை கண்டுபிடிக்கக் கூடியதக இருக்கும்.

HTTPS Redirect 


இந்த option ஐ yes என்று மேலுள்ள படத்தினைப்போல இருக்க செய்யுங்கள், இதனால் எனது blog site போல Secure ஆனதாக உங்கள் blog உம் மாறும். 



இதனால் என்ன நன்மை என்றால், Secure ஆன sites இனையே சில இணைய உலாவிகளும் (browsers), அனேக Antivirus programs உம் அனுமதிக்கின்றன. இதனை செய்யாவிட்டால் பல இடங்களில் உங்கள் பிளாக்கர் பாதுகப்பற்றது என காண்பிக்கப்படாமல் தடுக்கப்படும், சில பார்வையாளர்களே இது பதுகாப்பற்றது என நினைப்பார்கள். இது உங்களது பிளாக்கரின் முன்னேற்றத்தை தடுப்பதாக அமையும்.

 இதுவரை settings பகுதியில் basic பகுதி பற்றிப் பார்த்தோம், இனி  Search preference பகுதி பற்றிப் பார்ப்போம்.

Search preference


settings சென்று கீழுள்ள படத்திலுள்ளதுபோல தேர்வு செய்யுங்கள்
தேர்வு செய்ததும் கீழுள்ளவாறு தோன்றும். இங்கு முக்கியமாக 4 settings செய்யவேண்டும்.


Meta tags இல்,  Description.
Crawlers and indexing இல், Google Search Console, Custom robots txt, Custom robots header tags என்ற நாலுமே அவைகள்.

Description.

இந்தப் பகுதியில் நீங்கள் அதிகபட்சம் 150 எழுத்துக்களை எழுதலாம், உங்கள் பிளாக்கர் எதைப்பற்றி எழுதப்பட்டுள்ளது, என்னென்ன வகையான தகவல்களைக் கொண்டுள்ளது என்பதுபற்றிக் குறிப்பிடவேண்டும். ஷோர்ட் அண்ட் ஸ்வீட் ஆக!

Google Search Console.

இது ஒரு சிக்கலான, அதிக படிமுறைகள் கொண்ட செயற்பாடு, இதை தனிப்பதிவில் கொடுத்துள்ளேன். கீழே லிங் கொடுக்கப் பட்டுள்ளது.

Custom robots txt.

இந்தப் பகுதியில், உங்கள் பிளாக்கரின் Site Map இற்கான Coding இனை உள்ளிட வேண்டும். Site map coding ஐ உங்கள் பிளாக்கருக்காக தயாரிக்க கீழுள்ள லிங் இற்கு செல்லுங்கள், அங்கே உங்கள் Blogger Url இனை இடுங்கள்.
பின்னர் generate sitemap என்பதை அழுத்தினால், உங்கள் பிளாக்கடுக்கான sitemap coding தயாராகிவிடும்.


பின்னர் மேழுள்ள படத்தில் காட்டப்பட்டவாறு coding இன் பகுதியை copy செய்துகொள்ளுங்கள். அதை Custom robots txt பகுதியில் கீழுள்ளவாறு paste செய்து save செய்யுங்கள்.



Custom robots header tags.

இந்தப் பகுதிக்குச் சென்று கீழுள்ள படத்தில் காட்டியதுபோல settings இனை மாற்றிக் கொண்டு save செய்யுங்கள்.

இவ்வளவும் தான் ஒரு பிளாக்கரில் செய்யவேண்டிய முக்கிய செட்டிங்ஸ், இதனை செய்துபாருங்கள் படிப்படியாக உங்கள் பிளாக்கரின் பார்வையாளர்கள் அதிகரிப்பதைக் காணலாம்.

Post a Comment

0 Comments