Arduino Programming In Tamil - Arduino என்றால் என்ன?
Arduino என்பது பயன்படுத்த எளிதான வன்பொருள் (Arduino board) மற்றும் மென்பொருளை (Arduino software) அடிப்படையாகக் கொண்ட ஒரு திறந்த மூல மின்னணு தளமாகும்.
Arduino board |
Arduino boards ஆல் உள்ளீடுகளைப் படிக்க முடியும். உதாரணத்துக்கு, ஒரு சென்சாரில் ஒளி படும்போது, ஒரு பொத்தானில் ஒரு விரல் படும்போது, அல்லது ஒரு ட்விட்டர் செய்தி கிடைக்கும்போது, ஒரு எஸ்.எம்.எஸ் கிடைக்கப்பெறும்போது அதனால் உணர முடியும். பெற்றுக்கொண்ட தரவை வெளியீடாக மாற்றவும் முடியும் - ஒரு மோட்டாரை செயல்படுத்துதல், எல்.ஈ.டி-ஐ இயக்குதல், ஆன்லைனில் ஏதாவது வெளியிடுதல், கதவை மூடுதல், தண்ணீர்க் குளாயை திறத்தல் என்று பலவாறாக அமையும்.
போர்டில் உள்ள மைக்ரோகண்ட்ரோலருக்கு ஒரு சில வழிமுறைகளை (கோடிங் மூலம்) அனுப்புவதன் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் போர்டுக்கு நீங்கள் சொல்லலாம்.
அவ்வாறு செய்ய நீங்கள் அர்டுயினோ போர்ட், அதற்கான தேவையான இலத்திரனியல் கூறுகள், வயரிங்க், மற்றும் Arduino software இல் தயாரித்த உங்கள் கோடிங் என்பன தேவை.
Arduino Software |
பல ஆண்டுகள் வளர்ச்சியடைந்து, அன்றாட பொருட்கள் முதல் சிக்கலான அறிவியல் கருவிகள் வரை ஆயிரக்கணக்கான திட்டங்களின் மூளையாக அர்டுயினோ இருந்து வருகிறது.
உலகளாவிய தயாரிப்பாளர்களின் சமூகத்தை பொறுத்தவரை மாணவர்கள், பொழுதுபோக்குக்கிற்காக ஈடுபடுவோர், கலைஞர்கள், புரோகிராமர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் எனப் பலரும் இந்த திறந்த மூல தளத்தைச் பயன்படுத்துகின்றார்கள், அவர்களின் பங்களிப்புகள் நம்பமுடியாத அளவிலான அறிவை அர்டுயினோ வின் வளர்ச்சியில் சேர்த்துள்ளன. இது அர்டுயினோவில் புதியவர்களுக்கும் அனுபவம் வாய்ந்தோருக்கும் ஒரே மாதிரியான உதவியாக இருக்கும்.
Arduino project |
Arduino வின் வரலாறு
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் புரோகிராமிங்கில் பின்னணி இல்லாத மாணவர்களை இலக்காகக் கொண்டதும், வேகமான மற்றும் எளிதான கருவியாகவும் Ivrea Interaction Design Institute இல் ஆர்டுயினோ தயாரானது.
படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஒரு பரந்த சமூகத்தை உல்களாவிய ரீதியில் அடைந்தவுடன், புதிய தேவைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்படவே அதற்கேற்ப அர்டுயினோ போர்டு மாறத் தொடங்கியது. எளிய 8-பிட் போர்டுகளிலிருந்து IoT பயன்பாடுகள், அணியக்கூடிய சாதனங்கள், 3 டி பிரிண்டிங் மற்றும் உட்பொதிக்கப்பட்ட சூழல்களுக்கான (embedded environments) என்று இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது.
அனைத்து ஆர்டுயினோ போர்டுகளும் முற்றிலும் திறந்த மூலமாகும் (அதாவது அனைவரும் இலவசமாக ஒரு தடையுமின்றிப் பயன்படுத்தலாம்), பயனர்களை அவற்றை சுயாதீனமாக உருவாக்க அதிகாரம் அளித்துள்ளது. இதற்கான மென்பொருளும் திறந்த மூலமாகும், மேலும் இது உலகளவில் பயனர்களின் பங்களிப்புகளின் மூலம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
0 Comments